/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள் துவக்கி வைப்பு
/
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள் துவக்கி வைப்பு
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள் துவக்கி வைப்பு
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனங்கள் துவக்கி வைப்பு
ADDED : செப் 17, 2024 07:48 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள்) தொடர்பான பிரசார வாகனங்களை, மாவட்ட கலெக்டர் சரயு துவக்கி வைத்து கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2024 - -25ம் ஆண்டிற்கு சிறுதானியங்கள், 52,517 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்து, 1.63 லட்சம் டன் மொத்த உற்பத்தி செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.
மேலும் சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க, 4 கோடி ரூபாயில், உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. இதில், வயல்களில் ராகி, சோளம், கம்பு, சாமை ஆகிய பயிர்களில் தொகுப்பு செயல்விளக்கங்கள் அமைத்தல், 50 சதவீத மானியத்தில் சிறுதானிய விதைகள் வினியோகம் செய்தல், விதை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு, விதை உற்பத்தி மானியம் வழங்குதல், உயிர் உரம், நுண்ணுாட்ட உரம், பயிர் பாதுகாப்பு மருந்துகள் ஆகிய இடுபொருட்கள் வழங்கப்படுகின்றன. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் (ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்கள்) தொடர்பான பிரசார வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜமோகன் உள்பட பலர் உடனிருந்தனர்.