/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை கலைக்கல்லுாரியில் நுாலகம் திறப்பு
/
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை கலைக்கல்லுாரியில் நுாலகம் திறப்பு
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை கலைக்கல்லுாரியில் நுாலகம் திறப்பு
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை கலைக்கல்லுாரியில் நுாலகம் திறப்பு
ADDED : நவ 20, 2024 01:47 AM
பாலக்கோடு, நவ. 20-
பாலக்கோடு, கூட்டுறவு சர்க்கரை ஆலை கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்கள் பயன்பெறும் வகையில், கலைஞர் நுாலகத்தை -அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சர்க்கரை ஆலை, கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கலைஞர் நுாற்றாண்டு விழா நடந்தது. இதில், கலைஞர் நுாலக கட்டட திறப்பு விழா, மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பழனியப்பன் தலைமையில் நடந்தது. வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி நுாலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர், மாணவர்கள், இந்த நுாலகத்திலுள்ள பல்வேறு அறிவு சார்ந்த புத்தகங்களை படித்து பயன்பெற வேண்டும். சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள், அரசு போட்டிக்கு தேர்வு எழுதும் இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும், இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென, கேட்டுக்கொண்டார்.
தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் தடங்கம் சுப்ரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுரு உள்பட பலர் பங்கேற்றனர்.

