/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.23.40 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
/
ரூ.23.40 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ரூ.23.40 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ரூ.23.40 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:40 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதி கடத்துார் ஒன்றியம், வகுத்துப்பட்டி ஊராட்சி காலனி பகுதியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலி-ருந்து, 23.40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக, 2 வகுப்பறை கொண்ட கட்டடம் கட்டப்பட்டது.
இதை நேற்று, அ.தி.மு.க., -- -எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, மாணவர்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா, ஒன்றிய செயலாளர்கள் மதிவாணன், முருகன் ஒன்றிய குழு தலைவர் உதயா, பி.டி.ஓ.,க்கள் கலைச்செல்வி, மீனா, ஊராட்சி மன்ற தலைவர் மணி, தலைமை ஆசிரியர் சிவாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.பின் பொ.மல்லாபுரம் பேரூராட்சியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கூடுதல் நுாலக கட்டடம் கட்ட இடத்தை ஆய்வு செய்தார்.