/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.16 லட்சம் மதிப்பிலான திட்ட பணி துவக்கி வைப்பு
/
ரூ.16 லட்சம் மதிப்பிலான திட்ட பணி துவக்கி வைப்பு
ADDED : ஆக 07, 2025 01:00 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், கிருஷ்ணகிரி நகராட்சி அம்பேத்கர் நகர், செட்டியம்பட்டியில் சிமென்ட் சாலையும், பெத்தனப்பள்ளி பஞ்., தண்டேகுப்பம் கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடையும் அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
இதில், ஒன்றிய செயலாளர்கள் கன்னியப்பன், சூர்யா, பையூர் ரவி, எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், நகர செயலாளர் கேசவன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, இணை செயலாளர் சின்ராஜ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன், முன்னாள் நகர இளைஞர் அணி செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்