ADDED : ஆக 16, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை சாலையில் ஆர்.சி., தேவாலயம் அருகில், குறுகிய அளவிலான ரயில்வே பாலம் இருந்தது.
பாலத்தின் அடியில் ஒரு வாகனம் மட்டுமே செல்லும் நிலை இருந்தது.இதனால், இச்சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதையடுத்து, ரயில்வே பாலத்தை விரிவுபடுத்தி இருபுறமும் வாகனங்கள் செல்லும் வகையில் விரிவாக்க பணிகள் கடந்தாண்டு ஆக.,ல் ரயில்வே நிர்வாகம் துவங்கியது. அப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் தளி சாலை. ஓசூர் ரயில்வே சுரங்கபாதை வழியாக அனுப்பப்பட்டன.ரயில்வே பாலம் விரிவுபடுத்தும் பணிகள் முடிந்த நிலையில், அச்சாலையை பயன்பாடுக்கு கொண்டு வர வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் கூறியிருந்த நிலையில், நேற்று சுதந்திர தினத்தையொட்டி விரிவு படுத்தப்பட்ட ரயில்வே பாலம் திறக்கப்பட்டது.

