/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா
/
புனரமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா
ADDED : மார் 09, 2024 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், ஒரு கோடியே, 84 லட்சம் மதிப்பீட்டில், நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் புனரமைக்கப்பட்ட அறிஞர் அண்ணா பஸ் ஸ்டாண்டை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
இதில், ஊத்தங்கரை டவுன் பஞ்., தலைவர் அமானுல்லா, ஒன்றிய சேர்மேன் உஷாராணி குமரேசன், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கணேஷ், செயல் அலுவலர் ரவிசங்கர், வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.