/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'எக்சைடு பேட்டரி' நிறுவனத்தில் வருமான வரித்துறை 'ரெய்டு'
/
'எக்சைடு பேட்டரி' நிறுவனத்தில் வருமான வரித்துறை 'ரெய்டு'
'எக்சைடு பேட்டரி' நிறுவனத்தில் வருமான வரித்துறை 'ரெய்டு'
'எக்சைடு பேட்டரி' நிறுவனத்தில் வருமான வரித்துறை 'ரெய்டு'
ADDED : அக் 31, 2025 01:24 AM
ஓசூர்:  ஓசூர் அருகே உள்ள, 'எக்சைடு பேட்டரி' நிறுவனத்தில் நேற்று, வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே, தமிழக எல்லையில் சிச்சிருகானப்பள்ளியில், 'எக்சைடு பேட்டரி' தொழிற்சாலை இயங்குகிறது. இங்கு, 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.
இங்கு நேற்று அதிகாலை, 5:00 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். மாலை, 6:00 மணியை கடந்தும் சோதனை தொடர்ந்தது.
சோதனையில், சேலத்திலிருந்து, 5 அதிகாரிகள் மற்றும் பெங்களூரு பகுதியில் இருந்து, 6 அதிகாரிகள் என, 11 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.
இந்த பேட்டரி தொழிற்சாலை, ஓசூர் பகுதியில் இயங்குவது போல, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் இயங்கி வருகிறது.
அந்த தொழிற்சாலைகள், பெங்களூருவில் உள்ள நிறுவன உரிமையாளர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. பேட்டரிகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழிற்சாலைகளில், டாப் 10 வரிசையில், 'எக்சைடு' நிறுவனமும் ஒன்றாக உள்ளது.

