/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துவரை சாகுபடி பரப்பு அதிகரிப்பு கிருஷ்ணகிரி, நவ. 27- கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதால், மானாவாரி துவரை சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில், கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 1,558 ஏக்கரிலும், காவேரிப்பட்டணம் வட்டாரத்தில், 3,893 ஏக்கரும், பர்கூரில், 1,960 ஏக்கர், மத்துார், 3,998 ஏக்கர், ஊத்தங்கரை, 3,275 ஏக்கர், வ

ADDED : நவ 27, 2024 01:03 AM
துவரை சாகுபடி பரப்பு அதிகரிப்பு
கிருஷ்ணகிரி, நவ. 27-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்துள்ளதால், மானாவாரி துவரை சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டில், கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 1,558 ஏக்கரிலும், காவேரிப்பட்டணம் வட்டாரத்தில், 3,893 ஏக்கரும், பர்கூரில், 1,960 ஏக்கர், மத்துார், 3,998 ஏக்கர், ஊத்தங்கரை, 3,275 ஏக்கர், வேப்பனஹள்ளி, 810 ஏக்கர், ஓசூர், 2,600 ஏக்கர், சூளகிரி, 2,163 ஏக்கர், தளி, 5,125 ஏக்கர், கெலமங்கலம், 2,600 ஏக்கர் என, மொத்தம், 27,982 ஏக்கரில் துவரை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, 20 சதவீதத்திற்கு மேல் சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது: மழையை நம்பி மட்டுமே துவரை விதைக்கப்படுகிறது. தற்போது பெய்துள்ள மழையால், துவரை செடிகளில் நன்கு பூக்கள் பூத்துள்ளன. துவரை ஓசூர், ராயக்கோட்டை மற்றும் போச்சம்பள்ளி வாரச்சந்தைகளில் விற்கப்படுகிறது. தற்போது பச்சை துவரை காய்கள் கிலோ, 50 ரூபாய்க்கு விற்பனையாகிறது. துவரை பயிரிட ஒரு ஏக்கருக்கு நிலத்தை உழுதல், விதை, மருந்து உள்ளிட்டவை அதிகபட்சம், 15,000 ரூபாய் வரை செலவாகிறது. ஏக்கருக்கு, 600 கிலோ வரை துவரை கிடைக்கும். தற்போது பூ, காய் பிடிக்கும் பருவத்தில் உள்ளதால், வேளாண் துறை அலுவலர்கள், எளிய தொழில்நுட்பங்களை பின்பற்ற அறிவுறுத்தி உள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.