/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் வெள்ளப்பெருக்கு

ADDED : அக் 21, 2024 07:55 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,086 கன அடி நீர்-வரத்து இருந்தது. கெலவரப்பள்ளி அணை பகு-தியில், 10 மி.மீ., மழையும், நீர்பிடிப்பு பகுதியில் கன மழையும் பெய்ததால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, 1,206 கன அடியாக அதிக-ரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 41.98 அடிக்கு நீர் இருப்பு இருந்தது.
அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு, 1,146 கன அடி, வலது, இடது கால்-வாயில் பாசனத்திற்கு, 60 கன அடி என மொத்தம், 1,206 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. தென்-பெண்ணை ஆற்றில் நேற்று தொடர்ந்து, 2வது நாளாக, 1,000 கன அடிக்கு மேல் நீர் சென்றதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் ரசாயன நுரை-யுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.