/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
/
வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : அக் 10, 2024 01:56 AM
வாணியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 10---
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலை, ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளது வாணியாறு அணை. 65.27 அடி உயர கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம், 17 கிராமங்களிலுள்ள, 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அணையில் தண்ணீர் தேங்கி. சுற்றுவட்டரத்திலுள்ள விவசாய கிணறுகள், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் உயர்வதுடன், பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டார பகுதிகள் செழிப்பாக இருக்கும்.
கடந்தாண்டு மழை இல்லாததால், அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அணையிலிருந்த தண்ணீர் கால்நடைகளுக்கும், குடிநீர் தேவைக்காகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் திறக்கப் பட்டது. கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் பெய்து வரும் மழையால், வாணியாறு அணைக்கு நீர்வரத்து உள்ளது. இதனால், வாணியாறு அணை நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, 46.90 அடி தண்ணீர் நிரம்பி உள்ளது. அணைக்கு வினாடிக்கு, 153 கன அடி நீர்வரத்தால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தற்போது மழையால் அணை, 46.90 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. வடகிழக்கு பருவ மழை பெய்தால், அணை விரைவாக நிரம்பும். இதனால், விவசாய நிலங்கள் பாசன வசதி பெற வாய்ப்புள்ளது. இந்தாண்டு அணை முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.