/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
.எல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் 26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள் பதிவு
/
.எல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் 26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள் பதிவு
.எல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் 26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள் பதிவு
.எல்லை மாவட்டத்தில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள் 26 மாதங்களில் 221 போக்சோ வழக்குகள் பதிவு
ADDED : பிப் 16, 2025 03:59 AM
ஓசூர்: தமிழக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரியில், குழந்தைக-ளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த, 26 மாதங்களில் மட்டும், 221 போக்சோ வழக்குகள் பதி-வாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் தனியார் பள்ளியில் கடந்-தாண்டு ஆக.,ல் போலி என்.சி.சி., முகாமில், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழு-வதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதில் கைதான முக்கிய குற்றவாளி சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு உயிரிழந்தார்.
இதை விசாரிக்க, தனிக்குழுவை தமிழக அரசு அமைத்தது. இச்-சம்பவம் அடங்குவதற்குள், பர்கூர் தாலுகாவிலுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியின், 13 வயது மாணவியை, கூட்டு பலாத்காரம் செய்த அப்பள்ளி ஆசிரியர்கள் ஆறுமுகம், 48, சின்னசாமி, 57, பிரகாஷ், 37, ஆகியோர் கடந்த, 5 ல் கைதாகினர். அதேபோல், கிருஷ்ணகிரி அருகே, அரசு பள்ளி ஆசிரியர் ஒருவரது இல்ல திரு-மண நிகழ்ச்சிக்கு சென்ற, 10ம் வகுப்பு மாணவரை, ஆங்கில ஆசிரியர் உசேன் என்பவர், கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அவரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அதேபோல் கடந்த மாதம், ஓசூரை சேர்ந்த, 11 வயதான, 6 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 9, 10 மற்றும் பிளஸ் 1 மாணவன் என, 3 பேர் கைதாகினர். இப்படி, அடுத்தடுத்த சம்பவங்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரங்-கேறி வருகின்றன. கிராமங்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் வெளியுலகிற்கு வராமல், கட்டப்பஞ்சாயத்து செய்து மறைக்கப்ப-டுகின்றன.
படிக்கும் வயதில் 'தாய்'
தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடகா, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் கெலமங்-கலம், தளி ஒன்றியங்களில், அதிகளவில் மலைக்கிராமங்கள் உள்-ளன. அங்குள்ள மக்கள் போதிய படிப்பறிவின்றி, தங்களது குழந்-தைகளின் பாதுகாப்பு கருதி, சிறு வயதிலேயே திருமணம் செய்து வைக்கின்றனர். இதனால் படிக்கும் வயதில், குழந்தைக்கு தாயாக வேண்டிய நிலைக்கு பல மாணவியர் தள்ளப்படுகின்றனர். கிருஷ்-ணகிரி மாவட்டத்தில் கடந்த, 6 ஆண்டுகளில், 2,519 பேர், 18 ல் திருமணமாகி, 19 வயதில் கர்ப்பமடைந்துள்ளனர். பள்ளி மாண-வியருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், தமிழகத்தில் பாலியல் பலாத்காரம் அதிகம் நடக்கும் மாவட்டமாகவும், கிருஷ்-ணகிரி மாறி வருகிறது.
குழந்தை திருமணம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த, 2023 முதல், தற்போது வரை கடந்த, 26 மாதத்தில், 18 வயதிற்கு உட்பட்ட மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக, 221 பாலியல் சார்ந்த சம்பவங்களில், போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கடந்-தாண்டு, 130 போக்சோ வழக்குகள் பதிவாகின. கடந்தாண்டு, 22 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இம்மாதம் ஒரு, குழந்தை திருமணம் நடந்தது கண்டறியப்பட்டது. இப்படி, பெண் குழந்-தைகளுக்கு எதிரான பாலியல் சார்ந்த குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. மாணவியரை காதலிப்பதாக கூறி, பாலியல் சீண்டல்களில் இளைஞர்கள் ஈடுபடுகின்றனர். அதனால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி, அவர்களது பெற்றோர் குழந்தை திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
அத்து மீறல்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த, 26 மாதத்தில், 221 போக்சோ வழக்குகளில், 329 பேர் மீது வழக்கு பதியப்பட்டு, 324 பேர் கைதாகி, 5 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனாலும், பாலியல் குற்றங்கள் குறையவில்லை. ஆசிரியர்களே, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவமும், மகளை, தந்தையே பலாத்காரம் செய்யும் சம்பவமும் நடக்கிறது. அண்டை மாவட்டமான தர்மபுரியிலும், பாலியல் மற்றும் குழந்தை திருமணங்கள் நடக்கின்றன.
குறிப்பாக கடந்த, 2023 ல், 16 வயதில் திருமணம் செய்து வைக்-கப்பட்ட சிறுமி, தன் கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட
தகராறு குறித்து புகார் தெரிவிக்க, போலீஸ் ஸ்டேஷன் சென்றார்.
சிறுமியின் கணவர் வீட்டார் மீது வழக்குப்பதிந்த எஸ்.எஸ்.ஐ., ஒருவர்,
சிறுமியிடம் பழக துவங்கி அவரை, தனியாக ஒரு வீட்டில் குடிய-மர்த்தி,
8 மாதங்கள் குடும்பம் நடத்தி உள்ளார்.
வெளியூர் வேலை
தர்மபுரி மாவட்டத்தின் ஏரியூர், பென்னாகரம், பாலக்கோடு, ஏ.கே.தாண்டா சுற்றுவட்டாரத்தில், 25 க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு. விவசாயம் இல்லாதபோது பலர், வேலை தேடி ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் கர்நாடக, கேரள மாநிலத்-திற்கு
செல்கின்றனர். அப்போது, தங்களது பெண் குழந்தைகளை வீட்டி-லுள்ள பெரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு செல்கின்றனர். பெண் குழந்தைகள் வயது வந்தவுடன், பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் தங்க வைத்து, கிடைக்கும் வேலைக்கு அனுப்புகின்-றனர். அக்குழந்தைகளை குறி வைத்து தான், சமூக விரோதிகள் பாலியல் பலாத்காரம் போன்ற செயல்களை அரங்கேற்றுகின்-றனர்.
வாழ்க்கையை தொலைக்கும் மாணவியர்
கடந்தாண்டு அக்., முதல் டிச., மாதத்திற்குள், 66 குழந்தை திரும-ணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டும், குழந்தை திருமணம் நடந்தாக, 22 வழக்கும் பதியப்பட்டுள்ளன. கடந்த, 2022 ல் தர்மபுரி மாவட்டத்தில், 13 குழந்தை திருமணங்கள் நடந்த நிலையில், 110 க்கும் மேற்பட்ட திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன. இது குழந்தை திருமணங்கள் அதிகம் நடப்பதை தான் காட்டுகின்றன. குழந்தை திருமணங்களால், பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் மாணவியர், தங்களது கல்வியை தொடர முடியாமல், வாழ்க்-கையை தொலைத்து வருகின்றனர்.
போலீசார் மெத்தனம்
ஓசூர் ஆராதனா சமூக சேவை மற்றும் திறன்மேம்பாடு அறக்கட்-டளை நிறுவனரும், மாவட்ட சமூக நலன் மற்றும் பெண்கள் அதி-காரமளித்தல் துறையில் சேவை வழங்குனருமான ராதா கூறியதா-வது:
பெற்றோர் புகார் படி, மாயமான மாணவியை போலீசார் கண்ட-றிந்து மீட்க, ஒரு மாதம் வரை ஆகிறது. அதற்குள் மாணவி பாலியல் ரீதியான சீண்டல் களுக்கு ஆளாகி விடுகிறார். புகார் செய்ய வரும்போது, வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் செய்-கின்றனர். மாணவி அல்லது சிறுமி மாயமானவுடன், போலீசார் வேகமாக நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க முடியும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை திரு-மணம், பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் சிறுமியரை, கண்காணிக்கவோ, விசாரிக்கவோ, கவுன்சிலிங் கொடுக்கவோ, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் இல்லை. கடந்த ஓராண்டாக, திருவண்ணாமலையில் இருந்து தான் மாவட்ட குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் வருகின்-றனர். அதுவும் கடந்த, 3 மாதமாக வருவதில்லை. பாலியல் சீண்-டலுக்கு ஆளாகும் மாணவி அல்லது சிறுமியிடம், நேரில் வராமல், குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள், மொபைல்-போனில் வீடியோ காலில் பேசுகின்றனர். அது சரியாக இருக்-காது. அதேபோல், தர்மபுரி மாவட்டத்திலும், குழந்தைகள் நலக்குழு அலுவலர்கள் இல்லை. சேலத்திலிருந்து தான் வந்து செல்கின்றனர்.
சீரழிக்கும் மொபைல்போன்
மொபைல்போன் கலாசாரத்தால், மாணவியர் இளைஞர்களால் ஈர்க்கப்பட்டு, வீட்டை விட்டு ஓடி, கர்ப்ப
மடைவது அதிகரிக்கிறது. இதனால், அவர் களது வாழ்க்கை கேள்-விக்குறியாகிறது. பாலியல் சம்பவத்தால் பாதிக்கப்படும் மாண-வியை மீட்டு, ஆதரவற்ற குழந்தைகள் தங்கும் காப்பகத்தில் ஒப்-படைக்கின்றனர். அதை பார்த்து ஆதரவற்ற குழந்தைகளும், மன-முடையும் வாய்ப்புள்ளது. எனவே, பாலியல் ரீதியாகவும், குழந்தை திருமணத்தாலும் பாதிக்கப்படும் மாணவியை, அதற்-கேற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி, நல்ல மனநல ஆலோசகர் மூலம், கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். பாதிக்கப்படும் மாண-வியர், சிறுமியை மீட்டு, போலீசார் வசம் ஒப்படைப்பதுடன் நிற்-காமல், அவர்களுக்கு தேவையான கவுன்சிலிங் மற்றும் அனைத்து நடவடிக்கைகளுக்கும், மாவட்ட குழந்தைகள் பாது-காப்பு அலுவலகம் உடன் நிற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.