/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகரில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் போலீசார் இரவு ரோந்து மந்தம்; மக்கள் குற்றச்சாட்டு
/
கிருஷ்ணகிரி நகரில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் போலீசார் இரவு ரோந்து மந்தம்; மக்கள் குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி நகரில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் போலீசார் இரவு ரோந்து மந்தம்; மக்கள் குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி நகரில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் போலீசார் இரவு ரோந்து மந்தம்; மக்கள் குற்றச்சாட்டு
ADDED : அக் 29, 2024 12:59 AM
கிருஷ்ணகிரி நகரில் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள்
போலீசார் இரவு ரோந்து மந்தம்; மக்கள் குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி, அக். 29-
கிருஷ்ணகிரி நகரத்தில் திருட்டு, குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட் டம், கர்நாடகா, ஆந்திர மாநில எல்லைகளை ஒட்டி அமைந்துள்ளது. மாநில எல்லையோர மாவட்டம் என்பதால் அங்கு நடக்கும் கொலைகளில், சடலத்தை எல்லைகளில் வீசி செல்லும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கும். அதுபோல ஓசூரிலும் குற்றச்சம்பவங்களும், கொலைகளும் அதிகளவில் நடப்பது வாடிக்கையாக உள்ளது.
ஆனால், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், பெரிய அளவில் குற்றசம்பவங்கள் நடக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது திருட்டு, கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதில், பெரும்பாலான குற்றங்களில், 20 முதல், 30 வயதுடைய வாலிபர்களே ஈடுபடுவதும் தெரிந்துள்ளது. ஒவ்வொருவர் மீதும், 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தாலும், அவர்கள் தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கிருஷ்ணகிரியை பொருத்தவரை டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்கள் கட்டுப்பாட்டில் நகர் மற்றும் அதையொட்டிய பகுதிகள் வருகிறது. டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, 100 மீ., தொலைவிலுள்ள பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், பல வீடுகளில் திருட்டும், டூவீலரும் மாயமாகி உள்ளன. அதேபோல் டவுன், தாலுகா போலீஸ் ஸ்டேஷன்கள் கட்டுப்பாட்டில் வரும் கிருஷ்ணகிரி சிட்கோ வளாகம் குடிமகன்களின் கூடாரமாக மாறியுள்ளது. இப்பகுதியில் கடந்த, சில மாதங்களில் மட்டும், 10க்கும் மேற்பட்ட டூவீலர்கள் திருடுபோய் உள்ளன. மூடிக்
கிடக்கும் அலுவலகங்களை உடைத்து, பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்செல்கின்றனர்.
இது குறித்து போலீசாரிடம், புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், போதையில், கிருஷ்ணகிரி நகர் சுற்றுவட்டாரத்தில் வாலிபர்கள் செய்யும் திருட்டு, கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான், இரு கொலைகள் உட்பட, 10 வழக்குகள் உள்ள மணிமாறன் என்பவரை பிடித்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள பலரை போலீசார் பிடிக்கவில்லை. அதேபோல இப்பகுதியில் நடந்த சில கொலை வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இரவு நேர ரோந்து பணியிலும் போலீசார் மந்தமாக உள்ளனர்.
தீபாவளி நேரத்தில் இதுபோன்று இருந்தால் யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு விடுமோ என மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.