/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.ஜி.ஆர்., அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
/
எம்.ஜி.ஆர்., அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
எம்.ஜி.ஆர்., அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
எம்.ஜி.ஆர்., அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2025 01:39 AM
ஓசூர், ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்தார். மாணவி தேவிகா வரவேற்றார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலாளர் சேதுராமன், லுக் இந்தியா நிறுவன மூத்த மேலாளர் நாகேஷ் ஆகியோர், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கி பேசினர்.
அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி அறங்காவலர் லாசியா தம்பிதுரை, துணைத்தலைவர் சுரேஷ்பாபு, மேலாளர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஒருங்கிணைப்பாளர் லட்சுமி செய்திருந்தார். மாணவி ஆர்த்தி நன்றி கூறினார்.ஓசூர் அதியமான் பாலிடெக்னிக் கல்லுாரியில், முதல்வர் பாலாஜி பிரகாஷ் (பொறுப்பு) தலைமையில், சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. துறைத்தலைவர் சரளா வரவேற்றார். ஆசிரியைகள் ஜஸ்டினா, விஜயலட்சுமி பேசினர். பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. துறை தலைவர்கள் புவியரசு, நாகராஜன், நான்சி மேரி, சுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.