/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் இன்ஜி., கல்லுாரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறப்பு
/
அதியமான் இன்ஜி., கல்லுாரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறப்பு
அதியமான் இன்ஜி., கல்லுாரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறப்பு
அதியமான் இன்ஜி., கல்லுாரியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திறப்பு
ADDED : மார் 05, 2025 08:26 AM

ஓசூர்: ஓசூர், குமுதேப்பள்ளியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை, அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா, வங்கியின் சேலம் முதுநிலை மண்டல மேலாளர் விக்ரம் சேத் தலைமையில் நடந்தது.
பார்லிமென்ட் நிலைக்குழு தலைவரும், அதியமான் கல்வி நிறுவனங்கள் தலைவருமான தம்பிதுரை எம்.பி., இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மற்றும் ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்து பேசும்போது, ''மாணவர்களுக்கு, கல்வி மிகவும் அவசியமானது. அந்த வகையில் மாணவர்களுக்கு தேவையான கல்விக்கடனை வழங்கி, அவர்களை ஊக்குவிக்க வங்கிகள் முன்வர வேண்டும். அதிகளவில் நிபந்தனைகளை விதிக்காமல், மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக்கடன், கல்வி உதவி வழங்கி, வளர்ச்சிக்கு உதவ வேண்டும்,'' என்றார்.
அதியமான் கல்வி குழும இயக்குனர் ரங்கநாத், கல்லுாரி மேலாளர் நாராயணன், அதியமான் குரூப் கல்லுாரிகளின் முதல்வர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கிளை மேலாளர் பிரவீன்குமார் நன்றி கூறினார்.