/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் பி.எம்.சி., டெக் கல்லுாரியில் இந்திராகாந்தி திறந்த நிலை பல்கலை., மாணவர் சேர்க்கை

ADDED : டிச 21, 2024 03:03 AM
ஓசூர்: ஓசூர், பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லுாரி வளா-கத்தில், புதுடில்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலை., படிப்பு மையம் செயல்படுகிறது. இங்கு நடப்பு கல்வியாண்டிற்-கான பி.ஏ.,- பி.எஸ்சி.,- பி.காம்.,- பி.எஸ்.டபிள்யூ.,- பி.சி.ஏ., போன்ற இளங்களை படிப்புகளுக்கும், எம்.ஏ.,- எம்.காம்.,- எம்.எஸ்.டபிள்யூ.,- எம்.ஏ., (சைக்காலாஜி), எம்.சி.ஏ.,- எம்.பி.ஏ., போன்ற முதுகலை படிப்புகளுக்கும் தற்போது மாணவர் சேர்க்கை நடக்கிறது.
மேலும், 6 மாத சான்றிதழ் படிப்புகளும் இம்மையத்தில் உள்-ளது. அதற்கான மாணவர் சேர்க்கையும் நடக்கிறது. எஸ்.சி.,- எஸ்.டி., மாணவர்கள், தேர்வு கட்டணம் மட்டும் செலுத்தி, இதர கட்டணம் இல்லாமல் படிக்கலாம். எவ்வித வயது வரம்பும் யாருக்கும் கிடையாது. வீட்டிலிருந்தோ, பணிசெய்யும் இடத்திலி-ருந்தோ தொலைதுார கல்வியாக படிக்கலாம்.https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே சேர்க்கைக்கு பதிவு செய்ய வேண்டும். இந்த மையம் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள், மத்திய, மாநில அர-சுகளால் அங்கீகரிக்கப்பட்டவையாகும். மாணவர்களுக்கு வாரந்-தோறும் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை வகுப்புகள், பேராசியர்கள் மூலம் நடத்தப்படும். மேலும் விபரங்களுக்கு, பி.எம்.சி., டெக் படிப்பு மைய ஒருங்கிணைப்பாளர் கைலா-சத்தை, 99428 50720 என்ற எண்ணிலும், பேராசிரியர் சுதா-கரனை, 99408 61202 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்-ளலாம்.
இவ்வாறு கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.