/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்
/
உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்
உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்
உழவர் உற்பத்தியாளர் பண்ணையில் நேரடி நெல் கொள்முதல் துவக்கம்
ADDED : ஏப் 16, 2024 07:06 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் விவசாயிகள் இணைந்து நடத்தி வரும், உழவர் உற்பத்தியாளர் பண்ணை சார்பில், இந்தாண்டு முதல், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக விவசாய நிலத்திற்கு சென்று நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதில், நெல்லின் தரத்திற்கு ஏற்ப விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படுகிறது. நேற்று முதல் கட்டமாக, 100 மூட்டை நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உடனே பணம் வழங்கப்பட்டன.
எனவே காவேரிப்பட்டணம் சுற்றியுள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் நெல்லை, 94428 55064, 97880 16158, 98945 62818, 96002 00705 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு நேரடியாக விற்பனை செய்யலாம் என, உழவர் உற்பத்தியாளர் பண்ணையத்தின் தலைவர் ராமகவுண்டர் தெரிவித்துள்ளார்.