/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.23 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.1.23 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : அக் 19, 2024 01:22 AM
ரூ.1.23 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் துவக்கம்
ஓசூர், அக். 19-
ஓசூர்
ஒன்றியம், நந்திமங்கலம் கிராமத்தில் நபார்டு திட்டத்தில், 44 லட்சம்
ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை
நீர்த்தேக்க தொட்டி, பெருமாள்பள்ளி, சென்னசந்திரம் கிராமங்களில்
தலா, 18.42 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லி., கொள்ளளவு கொண்ட
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், கூசனப்பள்ளி, கக்கனுார்,
பட்டவாரப்பள்ளியில் தலா, 14.31 லட்சம் ரூபாய் மதிப்பில், அங்கன்வாடி
மையங்கள் கட்டும் பணிகள் என மொத்தம், 1.23 கோடி ரூபாய் மதிப்பிலான
வளர்ச்சி திட்டப்பணிகளை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ்
நேற்று பூஜை செய்து துவக்கி வைத்தார்.
ஓசூர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.