/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட பற்று அட்டை வழங்கல்
/
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட பற்று அட்டை வழங்கல்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட பற்று அட்டை வழங்கல்
புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்ட பற்று அட்டை வழங்கல்
ADDED : செப் 27, 2025 01:34 AM
கிருஷ்ணகிரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று முன்தினம் சென்னை உள்விளையாட்டு அரங்கில், கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்னும் கருப்பொருளில், தமிழ்நாட்டின் மாபெரும் கல்வி எழுச்சி கொண்டாட்ட விழாவில், நடப்பு கல்வி
ஆண்டிற்கான புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காணொளி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டதையடுத்து, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க., எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
தொடர்ந்து 4,140 கல்லுாரி மாணவியருக்கு புதுமை பெண் திட்டத்தில் மாதந்தோறும் 1,000 ரூபாய் மற்றும் முதலாம் ஆண்டு படிக்கும், 4,574 கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதந்தோறும், 1,000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான பற்று அட்டைகளை வழங்கினர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதுமை பெண் திட்டத்தில், 10,758 மாணவியர், தமிழ் புதல்வன் திட்டத்தில், 10,044 மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.