/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
/
பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
பொதுமக்களிடம் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தல்
ADDED : அக் 06, 2024 03:28 AM
கிருஷ்ணகிரி: ரத்த தானம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்-திட வேண்டும் என பர்கூர் தி.மு.க., - எம்.எல்.ஏ .,மதியழகன் கூறினார்.
கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில், தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, அரசு மருத்துவக் கல்லூரி ரத்த மையம், உதவும் உள்ளங்கள் அறக்கட்டளை இணைந்து ரத்த தான முகாமை நடத்-தியது. கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ.,வுமான மதியழகன் துவக்கி வைத்து பேசு-கையில், ''தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள கிருஷ்ணகி-ரியில், விபத்து ஏற்படும் சமயங்களில் விபத்தில் பாதிக்கப்-பட்டோர், கர்ப்பிணிகள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்ற, பொது-மக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வ ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும். முகாம் அமைப்பாளர்கள் கல்லுாரி மற்றும் தன்னார்வலர்கள், சமூக சேவகர்கள் ரத்த தானம் குறித்து பொது-மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை எம்.எல்.ஏ., வழங்கினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (வளர்ச்சி) ராமஜெயம், (வேளாண்) ராஜ-மோகன், தாசில்தார் பொன்னாலா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.