விதை தரம் அறிய பரிசோதனை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விதை தரம் அறிய பரிசோதனை விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 26, 2026 02:26 AM
கிருஷ்ணகிரி: விதையின் தரத்தை அறிந்துகொள்ள, விதை பரிசோதனை செய்ய வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட விதை பரிசோ-தனை நிலைய வேளாண் அலுவலர் லோகநாயகி கேட்டுக் கொண்-டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விதை முளைக்கும் போது, பூச்சி நோய் தாக்குதல் இன்றி நன்கு முளைத்து செழிப்புடன் வளர்ந்து, விளைச்சலில் லாபம் காண, தர-மான விதையை உபயோக்கித்தல் மிக அவசியம். தரமான விதை என்பது, முளைப்புதிறன், புறத்துாய்மை, பிற ரக கலப்பு மற்றும் ஈரப்பதம் ஆகியவற்றை குறிக்கும். புறத்துாய்மை பரிசோத-னையில், பிற பயிர் விதை மற்றும் களை விதை கலப்புகள் கண்ட-றியப்படுவதால், விதையின் இனதுாய்மை மற்றும் புறதுாய்மை காப்பாற்றப்படுகிறது. முளைப்பு திறன் காக்க, ஈரப்பதத்தை தெரிந்து கொள்ளுதல் அவசியம்.பூச்சி நோய் தாக்குதலால் முளைப்பு திறன் கெடாமல், நீண்ட நாட்கள் சேமிக்க, விதைகளின் ஈரப்பதம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. இதற்கு விதை பரிசோதனை அவசியம். விதை விற்பனையாளர்கள் மற்றும் விவசாயிகள் விதையின் தரத்தை அறிந்து கொள்ள, விதை மாதிரி எடுக்க வேண்டும். விதை உரிய விபரங்களுடன் ஒரு மாதிரிக்கு, 80 ரூபாய் என்ற விகித்தில் வேளாண் அலுவலர், விதை பரிசோதனை நிலையம், ஒருங்கிணைந்த வேளாண் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலு-வலக வளாகம், கிருஷ்ணகிரி என்ற முகவரிக்கு அனுப்பி, தரத்தை அறிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
