/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குடிநீர் வினியோக பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
/
குடிநீர் வினியோக பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
குடிநீர் வினியோக பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
குடிநீர் வினியோக பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
ADDED : அக் 11, 2024 01:02 AM
குடிநீர் வினியோக பணிகளை
விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி, அக். 11-
கிருஷ்ணகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக நடந்து வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வினியோக பணிகள் குறித்து அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் சரயு தலைமையில், நேற்று நடந்தது.
கூட்டத்தில், மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக நடந்து வரும் பணிகள், இருளர் இன மக்களுக்கு கூடுதல் வீடுகள் கட்டுமான பணிகள், பிரதம மந்திரி ஜென்மன் திட்டத்தில் வீடுகள் கட்டுமான பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீர் வினியோக பணிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் தொடர்பாக ஆலோசித்தார்.
தொடர்ந்து பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம் மூலம் நடந்து வரும் பணிகள் தொடர்பாக அலுவலர்களுடன் கலெக்டர் ஆலோசனை நடத்தினார்.
குடிநீர் வினியோக பணிகள் மற்றும் தெருவிளக்கு போன்ற பல்வேறு அடிப்படை திட்ட பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். கனவு இல்லம் திட்ட வீடு கட்டுமான பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினார்.
கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராமஜெயம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மற்றும் பி.டி.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.