/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தனியார் நிறுவன அறிவிப்பு பலகையில் திருக்குறள், விளக்கம் எழுத அறிவுறுத்தல்

ADDED : மே 18, 2025 06:08 AM
கிருஷ்ணகிரி: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களில், அறிவிப்பு பலகையில் திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை காட்சிப்படுத்த, கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசு அலுவலகங்களில் எழுதப்படுவது போல, அனைத்து தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களிலும், திருக்குறள் உரை எழுதுவதை ஊக்குவிக்கும் வகையில், 'தினம் ஒரு குறள்' என்ற அடிப்படையில், பொருள் விளக்கத்துடன் தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில், அறிவிப்பு பலகைகளில் காட்சிப்படுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை நிர்வாகங்களில் திருக்குறளும், அதன் உரையும் எழுதும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், தொழில் நல்லுறவு பரிசுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்யும்போது, இதற்காக சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும். எனவே, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் வேலையளிப்போர் அமைப்புகள், தங்கள் நிறுவன அறிவிப்பு பலகையில், திருக்குறளை, அதன் பொருள் விளக்கத்தோடு காட்சிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.