/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
40 இருளர் குடும்பங்களுக்கு காப்பீடு அட்டை வழங்கல்
/
40 இருளர் குடும்பங்களுக்கு காப்பீடு அட்டை வழங்கல்
ADDED : மே 06, 2025 01:49 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தினேஷ் குமார் தலைமையில் நடந்தது. இதில், விலையில்லா தையல் எந்திரம், மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 478 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். தொடர்ந்து முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில், பர்கூர் அடுத்த ஒப்பதவாடி இருளர் இன மக்களின், 40 குடும்பங்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்தவ காப்பீடு அட்டைகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
அதே போல தாட்கோ சார்பில் தமிழ்நாடு துாய்மை பணியாளர் நல வாரியத்தின் மூலம், 30 துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டைகளும், 11 துாய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு. 24,250 மதிப்பில் கல்வி உதவிக்கான காசோலைகளையும் கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் தனஞ்செயன், கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., ஷாஜகான், மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.