/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
/
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி
ADDED : ஜன 13, 2024 03:41 AM
ஓசூர்: ஓசூர் வட்டார வேளாண்மைத்துறையின் அட்மா திட்டம் சார்பில், அட்டூர் கிராமத்தில் நிலக்கடலை பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து, விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.கிருஷ்ணகிரி உழவர் பயிற்சி நிலைய துணை வேளாண்மை இயக்குனர் சீனிவாசன், நிலக்கடலை மற்றும் சிறுதானிய சாகுபடி சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கமளித்தார்.
அதியமான் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய தொழில்நுட்ப வல்லுனர் ராசுகுமார், நிலக்கடலையில் உற்பத்தி திறன் மேம்படுத்தும் தொழில்நுட்ப முறைகள், ஊடுபயிர் சாகுபடி செய்வதன் நன்மைகள், நிலக்கடலையில் பூச்சி மற்றும் நோய் கட்டுப்படுத்தும் மேலாண்மை முறைகள் பற்றி விளக்கினார். துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், உதவி வேளாண்மை அலுவலர்கள் சத்தியமூர்த்தி, சின்னசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.