/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கூட்டுறவு உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு 26ல் நேர்முக தேர்வு
/
கூட்டுறவு உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு 26ல் நேர்முக தேர்வு
கூட்டுறவு உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு 26ல் நேர்முக தேர்வு
கூட்டுறவு உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கு 26ல் நேர்முக தேர்வு
ADDED : நவ 19, 2025 02:17 AM
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரியில் வரும் 26-ல், கூட்டுறவு உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடக்கிறது.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள உதவியாளர் மற்றும் எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சேர்ப்பு நிலையம் சார்பில் கடந்த அக்.,11-ல், நடந்தது. எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு தகுதி அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வ
ர்களின் விபரங்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் http://www.drbkrishnagiri.net இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும், 26ல், நேர்முகத் தேர்வு நடக்கிறது. மேலும், நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், தங்கள் நுழைவுச் சீட்டினை http://www.drbkrishnagiri.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.