/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடக எல்லையில் சடலம் கொலையா என விசாரணை
/
கர்நாடக எல்லையில் சடலம் கொலையா என விசாரணை
ADDED : மார் 19, 2025 01:48 AM
ஓசூர்,:கர்நாடகா மாநில எல்லையில், காயத்துடன் ஆண் சடலம் கிடந்த நிலையில், அம்மாநில போலீசார், தமிழக போலீசாருடன் விசாரணை நடத்தினர்.
தமிழக எல்லையில் இருந்து, 2.5 கி.மீ., துாரத்தில், கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி அருகே தனியார் நிலத்தில், 35 வயது ஆண் இறந்து கிடந்துள்ளார். அத்திப்பள்ளி போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர்.
வாயில் ரத்தம் வழிந்த நிலையிலும், உடலில் முள்கம்பிகள் குத்தியது போன்ற ரத்த காயங்களும், வெட்டுக்காயங்களும் இருந்தன. தமிழக எல்லையை ஒட்டி சடலம் கிடந்ததால், ஓசூர் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என, அத்திப்பள்ளி போலீசார் சந்தேகமடைந்து, தமிழக போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். ஆனால், இறந்த நபர் யார் என்ற விபரத்தைக் கண்டறிய முடியவில்லை.
விபத்தில் சிக்கி துாக்கி வீசப்பட்டு அந்த நபர் உயிரிழந்திருக்கலாம் அல்லது அவரை கொலை செய்து சடலத்தை வீசிச் சென்றிருக்கலாம் என, அத்திப்பள்ளி போலீசார் சந்தேகிக்கின்றனர்.