/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உதயநிதி பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாட அழைப்பு
/
உதயநிதி பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாட அழைப்பு
உதயநிதி பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாட அழைப்பு
உதயநிதி பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாட அழைப்பு
ADDED : நவ 26, 2024 01:40 AM
உதயநிதி பிறந்தநாளை குடும்ப
விழாவாக கொண்டாட அழைப்பு
ஓசூர், நவ. 26-
கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலாளருமான உதயநிதி பிறந்த நாள் விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திலுள்ள மாநகர, ஒன்றிய, பேரூர், கிளை, வார்டு பகுதிகள் முழுவதும், கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு, புத்தகம், பேனா வழங்கியும், முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கியும், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள், இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் அனைவரும், உதயநிதி பிறந்தநாளை குடும்ப விழாவாக கொண்டாட வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.