/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அன்புமணி நடைபயணத்திற்கு அணி திரண்டு வர அழைப்பு
/
அன்புமணி நடைபயணத்திற்கு அணி திரண்டு வர அழைப்பு
ADDED : ஆக 18, 2025 02:42 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்தில் இன்று (18-ம் தேதி) உரிமை மீட்க தலைமுறை காக்க மருத்துவர்
அன்புமணி நடைபயணம் மேற்கொள்வதால், அனைவரும் திர-ளாக பங்கேற்க, மாவட்ட செயலாளர் மோகன்ராம் தெரிவித்-துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்தில், 'உரிமை மீட்க தலைமுறை காக்க' பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், மருத்துவர் அன்புமணி நடைபயணம் மேற்கொள்கிறார். அதன்படி இன்று (18ம் தேதி) திங்கள்கிழமை காலை, 10:00 மணியளவில், வேப்பனஹபள்ளி தொகுதிக்கு உட்பட்ட எண்ணேகொள்புதுார் கால்வாய் திட்ட (வலது மற்றும் இடதுபுற கால்வாய், படேதலாவ் ஏரி முதல் மத்துார் வரை) பணிகளை ஆய்வு செய்கிறார்.
பின்னர், மாலை, 4:00 மணியளவில் ராயக்கோட்டை சாலை பெருமாள் நகரிலிருந்து, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் வரை நடைப்பயணம் மேற்கொண்டு, மக்களை சந்திக்கிறார். மாலை, 5:00 மணியளவில், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
தொடர்ந்து நாளை (19-ம் தேதி) செவ்வாய்கிழமை காலை, 10:00 மணியளவில் கங்கலேரி கிராமத்தில், மா விவசாயிகளுடன் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்நி-கழ்ச்சிகளில், பா.ம.க., மாநில, மாவட்ட நிர்வாகிகள், விவசா-யிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பங்-கேற்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.