/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இ.பி.எஸ்.,ஐ வரவேற்க திரளாக பங்கேற்க அழைப்பு
/
இ.பி.எஸ்.,ஐ வரவேற்க திரளாக பங்கேற்க அழைப்பு
ADDED : ஆக 11, 2025 08:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட, செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவருமான இ.பி.எஸ்., கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு, நாளை (ஆக.12) வருகை தர உள்ளார். ஓசூரிலிருந்து மாலை, 4:30 மணிக்கு புறப்பட்டு, சூளகிரி தேசிய நெடுஞ்சாலை வழியாக, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், டி.பி.,ரோடு, காந்திசிலை வழியாக வருகை தந்து, அரசு மருத்துவமனையில் இருந்து நடைபயணம் மேற்கொண்டு, ரவுண்டானா வாசவி கேப் அருகில், மாலை, 5:00 மணிக்கு, பேசுகிறார். மேலும், 7:30 மணிக்கு, பர்கூர், எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், 8:30 மணிக்கு, ஊத்தங்கரை, எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும் பேச உள்ளார்.
எனவே இன்னாள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை, அணிகளின் நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.