/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் கடையில் காத்திருந்த மக்கள்
/
ரேஷன் கடையில் காத்திருந்த மக்கள்
ADDED : ஆக 11, 2025 08:06 AM
அதியமான்கோட்டை: அதியமான்கோட்டையில் உள்ள ரேஷன் கடையில், 1,082 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கிராம பகுதியை சேர்ந்த கடை என்பதால், பெரும்பாலானோர் பொருட்களை தவறாமல் வாங்கி செல்கின்றனர்.
இம்மாதத்தில் ஒரு நாள் மட்டும் ரேஷன் பொருள் வழங்கப்பட்டது. 2வது நாளாக பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால், நேற்று காலை, 6:30 மணி முதல் அப்பகுதி மக்கள் ரேஷன் கடைக்கு வந்து காத்திருந்தனர்.
கூட்டம் அதிகமாக இருந்ததால், வரிசை யில் காத்திருந்தனர். மேலும், கடைக்கு வந்து காத்திருந்த பெண்களுக்கு, அவர்களுடைய வீட்டிலிருந்தவர்கள் கொண்டு வந்து கொடுத்த உணவை கடை வாசலில் அமர்ந்து சாப்பிட்டனர். காலை, 9:00 மணிக்கு கடை ஊழியர் வந்தபின் பொருட்களை வாங்கி சென்றனர்.இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இக்கடையில் அதிக குடும்ப அட்டை உள்ளது. இதை இரு கடைகளாக பிரித்து கொடுக்க வேண்டும். மாதத்தில், 10 நாட்கள் ரேஷன் பொருட்கள் வழங்கும் ஊழியர், அலுவலக பணி மற்றும் மீட்டிங் என சென்று விடுகிறார்.ஒரு சில நாட்கள் மட்டும் பொருட்கள் வழங்குவதால், அதை வாங்க பொதுமக்கள் காலை முதல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.எனவே, மாதத்தின் முதல், 15 நாட்களில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.