/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' தயாரித்து மாநில அளவில் சிறப்பிடம் கொல்லிமலை மாணவியரின் திறமைக்கு 'இஸ்ரோ' வாய்ப்பு
/
'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' தயாரித்து மாநில அளவில் சிறப்பிடம் கொல்லிமலை மாணவியரின் திறமைக்கு 'இஸ்ரோ' வாய்ப்பு
'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' தயாரித்து மாநில அளவில் சிறப்பிடம் கொல்லிமலை மாணவியரின் திறமைக்கு 'இஸ்ரோ' வாய்ப்பு
'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' தயாரித்து மாநில அளவில் சிறப்பிடம் கொல்லிமலை மாணவியரின் திறமைக்கு 'இஸ்ரோ' வாய்ப்பு
ADDED : டிச 25, 2024 02:25 AM
சேந்தமங்கலம், டிச. 25-
கொல்லிமலை மாணவியர், 'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' தயாரித்து மாநில அளவில் சிறப்பிடம் பிடித்ததுடன், 'இஸ்ரோ'வை சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
நாமக்கல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி, திருச்செங்கோட்டில், கடந்த ஆக., 23ல் நடந்தது.
இதில், பல்வேறு யூனியன்களில் இருந்து தேர்வு பெற்ற மாணவர்கள், தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். இதில், கொல்லிமலை யூனியன், குண்டூர் நாடு பஞ்சாயத்து, நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியர் கவுசிகா, நதியா ஆகியோர், மலைப்பிரதேச மாணவர்கள் பயன்படுத்தும் வகையில், 'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' ஒன்றை கண்காட்சியில் வைத்திருந்தனர்.
இந்த, 'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்'கில், முதலுதவி பெட்டி, ரைட்டிங் டேபிள், ட்ராலி, பெண்கள் பாதுகாப்பு அலாரம், வன விலங்குகளிடம் இருந்து தப்பிக்க டார்ச் லைட் உள்ளிட்ட, 32 வகையான பயன்களை உள்ளடக்கிய வசதிகள் இருந்தன.
இதனால், மாவட்ட அளவில் நடந்த கண்காட்சியில், கொல்லிமலை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர், முதலிடம் பிடித்தனர். அதை தொடர்ந்து, கடந்த நவ., 9ல் மாநில அளவில் மதுரையில் நடந்த போட்டியில் சிறப்பிடம் பிடித்தனர். இதனால், இந்த கொல்லிமலை மாணவியர், விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ'விற்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, கொல்லிமலை பாப்பன்கிராய்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவி கவுசிகா கூறுகையில், ''நான், அரியூர் நாடு பஞ்சாயத்து, பாப்பன்கிராய்பட்டியில் இருந்து தினமும் பள்ளிக்கு நடந்து வருகிறேன். அப்போது எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், இந்த, 'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்'கை வடிவமைக்க முடிவு செய்து, பள்ளி ஆசிரியர்களின் துணையோடு இதை வடிவமைத்தேன்,'' என்றார்.
கொல்லிமலை கம்பிப்பாறை கிராமத்தை சேர்ந்த மாணவி நதியா கூறுகையில், ''மலைப்பகுதியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு உதவும் வகையில், 'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்'கை கண்டுபிடித்தோம். மழைக்காலங்களில் பள்ளிக்கு நடந்து வந்து, செல்லும் போது மிகவும் பயமாக இருக்கும். இதற்கு தீர்வு காணும் வகையில், 32 வகையான பொருள்கள் வைத்துக்கொள்ளும் வகையில் வடிவமைத்தோம்,'' என்றார்.
இதுகுறித்து, அறிவியல் ஆசிரியர் சந்திரசேகரன் கூறுகையில், ''கொல்லிமலை மலைப்பகுதியை சேர்ந்த இந்த மாணவியர், விவசாய கூலித்தொழிலாளர் குடும்பத்தில் பிறந்தவர்கள். தினமும், 3 கி.மீ., துாரம் பள்ளிக்கு நடந்தே வந்து செல்கின்றனர்.
மழைக்காலங்களில் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால், அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில், 'ஸ்மார்ட் ஸ்கூல் பேக்' தயாரித்து கண்காட்சிக்கு வைத்தனர். மலைப்பகுதியை சேர்ந்த மாணவியர், மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து, 'இஸ்ரோ'விற்கு செல்லும் வாய்ப்பை பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது,'' என்றார்.