/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டிராக்டர் கவிழ்ந்து ஐ.டி., ஊழியர் பலி
/
டிராக்டர் கவிழ்ந்து ஐ.டி., ஊழியர் பலி
ADDED : செப் 10, 2025 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி அடுத்த, பெரியகரடியூர், சோலக்கொட்டாயை சேர்ந்தவர் சிலம்பரசன், 34. இவர், பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஐ.டி., ஊழியராக பணி செய்து வந்தார்.
விடுமுறையில் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த இவர், தனக்கு சொந்தமான மகேந்திரா டிராக்டரில் விவசாய நிலத்தில் நெல் நடவுக்காக, உழவு செய்து விட்டு டிராக்டரை வீட்டிற்கு ஓட்டி வந்தபோது, பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிராக்டருக்கு அடியில் சிக்கி, சம்பவ இடத்தில் சிலம்பரசன் உயிரிழந்தார். தகவலின்படி, நாகரசம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

