/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ - ஜியோ உண்ணாவிரத போராட்டம்

ADDED : மார் 24, 2025 07:10 AM
கிருஷ்ணகிரி: தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஜாக்டோ - ஜியோ சார்பில், நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, மாரப்பன், மாதப்பன், தங்கதுரை ஆகியோர் கூட்டு தலைமை வகித்தனர்.
போராட்டத்தில், 2003 ஏப்., 1க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2025 ஏப்., 1 முதல் சரண் விடுப்பு ஒப்படைப்பு மற்றும் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும். இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். கல்லுாரி பேராசியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு ஊக்க ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், ஹிந்து சமய அறநிலைய ஆட்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் வாசுகி ஆகியோர் பேசினர்.