ADDED : பிப் 11, 2025 07:05 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த தடிக்கல் அண்ணா நகர் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் ரமேஷ், 12. அப்பகுதியிலுள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து
வந்தார்; இவரது தம்பி தினேஷ், 5, ஒன்றாம் வகுப்பு படிக்கிறார்; நேற்று முன்தினம் மதியம், 12:30 மணிக்கு,
ரமேஷ், தினேஷ் இருவரும், பஞ்சப்பள்ளி - தேன்கனிக்-கோட்டை சாலையிலுள்ள தடிக்கல் பகுதியில்,
சாலையோரம் நடந்து சென்றனர்.அப்போது, தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த வேடம்பட்-டியை சேர்ந்த வசந்தகுமார், 35, என்பவர்,
மகேந்திரா பொலிரோ ஜீப்பை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டி வந்தவர், அவர்கள் மீது
மோதினார்.இதில் படுகாயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், தேன்கனிக்கோட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் வழியிலேயே ரமேஷ் உயிரிழந்தார். தம்பி தினேஷ்,
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளார். ரமேஷின் தாய் தீர்த்-தம்மா, 29, புகார் படி, தேன்கனிக்கோட்டை போலீசார்
விசாரிக்-கின்றனர்.