தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/எம்.சாண்ட், ஜல்லி கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட், ஜல்லி கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்

எம்.சாண்ட், ஜல்லி கடத்தல் இரண்டு லாரிகள் பறிமுதல்


ADDED : நவ 25, 2026 06:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2026 06:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகலுார்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கக்கனுார் சோதனைச்சாவடி அருகே, சேவகானப்பள்ளி வி.ஏ.ஓ., கோபு மற்றும் வருவாய்த்துறையினர், நேற்று (நவ.,24) வாகன சோதனை செய்தனர்.

அவ்வழியாக வந்த, 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, உரிய அனுமதி சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக, கர்நாடகா மாநிலத்திற்கு ஒரு லாரியில், 4 யூனிட் ‘எம்.சாண்ட்’, மற்றொரு லாரியில், 2 யூனிட் ஜல்லி கற்களை கொண்டு செல்வது தெரிந்தது. லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாகலுார் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

வி.ஏ.ஓ., கோபு புகாரின்படி, ஓசூர் வசந்த் நகரை சேர்ந்த லாரி டிரைவர் மாதேஷ்குமார், 34, என்பவரை, போலீசார் கைது செய்தனர். லாரி உரிமையாளரான, ஓசூர் அருகே அகரம் இந்திரா நகரை சேர்ந்த விஜய், 27, மற்றும் மற்றொரு லாரியின் டிரைவர், உரிமையாளரையும் பாகலுார் போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us