/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெருமாள் கோவிலில் நகை, காணிக்கை திருட்டு
/
பெருமாள் கோவிலில் நகை, காணிக்கை திருட்டு
ADDED : அக் 06, 2025 03:59 AM
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கொத்தகோட்டை கிரா-மத்தில் ஸ்ரீநிவாசா பெருமாள் கோவில், கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மிண்டிகிரி, கொத்தகோட்டை, ஆலேரஹள்ளி, பாம்பட்டி
உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை செய்து
வழிபாடு செய்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் புரட்டாசி, 3வது சனிக்கிழமை அன்று அதிகாலை முதலே மாலை வரை சிறப்பு பூஜைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. அன்றி-ரவு கோவிலின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தாலி, 5 அடி உயரமுள்ள 2 வெண்கல குத்துவிளக்கு, வெண்கல குடம் ஒன்று மற்றும் இரண்டு உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்த காணிக்கை, ஒரு லட்சம் ரூபாய் மற்றும் 'சிசிடிவி' கேமராவின் டிவிஆர்
உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகு-றித்து மத்துார் போலீசார், அப்பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.