/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெருநாய்கள் கடித்து 9 பேர் படுகாயம்
/
தெருநாய்கள் கடித்து 9 பேர் படுகாயம்
ADDED : அக் 06, 2025 03:59 AM
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்-றுப்புற பகுதிகளில், தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.
மாதந்தோறும் அதிகபட்சம், 60 பேர் வரை தெரு நாய் கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தேன்கனிக்கோட்டை அருகே மேலுார் கிராமத்தில் சுற்றித்திரிந்த தெருநாய், அப்பகுதியை சேர்ந்த சிறுவன் விதார்த், 9, தொழிலாளி ருத்ரப்பா, 40, உட்பட, 5 பேரை நேற்று கடித்து குதறியது. அனைவரும், நெமலேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்-டுள்ளனர்.அதேபோல், தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவில், ஓசூர் அக்-ரஹாரம் பகுதியை சேர்ந்த நாராயணப்பா, 70, உனிசெட்டியை சேர்ந்த பச்சையம்மாள், 40, ஜவனசந்திரத்தை சேர்ந்த பைரவன் என்பவரது, 3 வயது பெண் குழந்தை மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர், தெருநாய் கடியால் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேன்கனிக்கோட்டை தாலுகாவில் இதுவரை மொத்தம், 4 பேர் தெருநாய் கடியால் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்-ளனர். நாய்கடியால் தொடர்ந்து மக்கள் பாதிக்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.