நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை, ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலக வளாகத்தில், வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. ஓசூரில் இயங்கி வரும் மொபைல்போன் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிய, வேலை வாய்ப்பு முகாம் நேர்முக தேர்வு நடந்தது. இதில், 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். அதில், 30 பேர் தேர்வாகினர்.
முகாமிற்கு ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் சாகுல்அமீது, வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, தெற்கு வேங்கன், மத்திய சாமிநாதன், நகர செயலாளர் ஆறுமுகம் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

