/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி
/
மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி
மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி
மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி
ADDED : அக் 29, 2025 01:11 AM
கிருஷ்ணகிரி, தொடக்கப்பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை மேம்படுத்த, ஆசிரியர்களுக்கு, 3 நாள், 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆரம்ப பள்ளி குழந்தைகளுக்கு, செயற்கை ஒலியியல் மூலம், ஆங்கில எழுத்தறிவு கற்பிப்பதற்கு, வேடிக்கையான மற்றும் குழந்தைத்தனமான அணுகுமுறைதான், 'ஜாலி போனிக்ஸ்' பயிற்சி முறை.
தனியார் பள்ளிகளில் மட்டும் இருந்த இப்பயிற்சி, தற்போது, 'ஜாலி பியூச்சர்ஸ்' என்ற தனியார் அமைப்பு மூலம், முதல் முறையாக அரசு பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, அரசு பள்ளி ஒன்றாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழ் வழி பயிலும், அரசு பள்ளி குழந்தைகள், ஆங்கில எழுத்துகளில் உச்சரிப்பை எளிமையாக கற்க முடியும்.
அதன்படி, தொடக்கநிலை மாணவர்களின் ஆங்கிலத்திறனை மேம்படுத்தும் பொருட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட அலுவலகத்தில், ஆங்கில ஆசிரியர்களுக்கு, 3 நாள் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் துவங்கியது. இதில், 10 ஒன்றியங்களில் இருந்து தலா, 5 ஆசிரியர்கள் வீதம், 50 பேருக்கு, 'ஜாலி போனிக்ஸ்' மற்றும் 'ஜாலி கிராமர்' பயிற்சியானது, 'ஜாலி பியூச்சர்ஸ்' என்ற அமைப்பின் மூலம் வழங்கப்படுகிறது.
பயிற்சியை, சி.இ.ஓ., (பொ) முனிராஜ் துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கு, பயிற்சி கையேட்டை வழங்கினார். இதில், உதவி திட்ட அலுவலர் மகேந்திரன் பங்கேற்றார். பயிற்சியின் கருத்தாளராக சீதாலட்சுமி செயல்பட்டார். ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் செய்திருந்தார்.

