ADDED : ஜூலை 16, 2026 01:45 AM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், ஆனே-கொள்ளு பஞ்., உட்பட்ட தொட்ட பேலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக நேற்று கொண்டாடப்-பட்டது.
மாணவ, மாணவியருக்கு பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசுலு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மாணவ, மாணவிய-ருக்கு இனிப்புகள் பரிமாறப்பட்டன. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் என பலர் பங்கேற்றனர்.
