/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மதுபானம் கடத்தியவர் கைது
/
கர்நாடகா மதுபானம் கடத்தியவர் கைது
ADDED : ஆக 03, 2025 12:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அஞ்செட்டி :கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி ஸ்டேஷன் எஸ்.ஐ., மோகன் மற்றும் போலீசார், தேவன்தொட்டி கிராமத்தில் உள்ள அரசு விடுதி அருகே, நேற்று முன்தினம் இரவு வாகன சோதனை செய்தனர். அவ்வழியாக வந்த பஜாஜ் பல்சர் பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது, 7 பெட்டிகளில் கர்நாடகா மதுபானத்தை விற்பனை செய்ய கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால் பைக்கை ஓட்டி வந்த, அஞ்செட்டி அடுத்த தொட்டமஞ்சு அருகே கப்பக்குழி கிராமத்தை சேர்ந்த தங்கதுரை, 40, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 336 பாக்கெட் கர்நாடகா மதுபானம், பஜாஜ் பல்சர் பைக்கை பறிமுதல் செய்தனர்.

