/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மதுபானம்,புகையிலை கடத்தியவர் கைது
/
கர்நாடகா மதுபானம்,புகையிலை கடத்தியவர் கைது
ADDED : மே 04, 2025 01:15 AM
ஓசூர்:தமிழக எல்லையான ஓசூர் பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், மத்திகிரி ஸ்டேஷன் எஸ்.எஸ்.ஐ., செல்வம் மற்றும் போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அவ்வழியாக வந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நிறுத்தி சோதனை செய்த போது, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் பகுதியில் இருந்து, கெலமங்கலத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது. இதனால் ஸ்கூட்டரை ஓட்டி வந்த, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல் அருகே பகதுார்புரா பகுதியை சேர்ந்த மஞ்சுநாத், 32, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 8,100 ரூபாய் மதிப்புள்ள, 12 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் 1,300 ரூபாய் மதிப்புள்ள, 20 பாக்கெட் கர்நாடகா மதுபானம் மற்றும் ஸ்கூட்டரை பறிமுதல் செய்தனர்.