/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பைக் மீது வேன் மோதல் கர்நாடகா வாலிபர் பலி
/
பைக் மீது வேன் மோதல் கர்நாடகா வாலிபர் பலி
ADDED : ஆக 07, 2025 01:01 AM
போச்சம்பள்ளி,கர்நாடக மாநிலம், பெங்களூரு, டி.சி.பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹர்சித், 27. பெங்களூரு, கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரினோ, 24. இருவரும் காதலர்கள். நேற்று அதிகாலை, 3:00 மணியளவில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் அடுத்த, கண்ணன்டஹள்ளி பகுதியில் சென்றனர்.
அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் அவர்கள் மீது மோதியது. இதில், ஹர்சித் சம்பவ இடத்திலேயே பலியானார். ரினோ பலத்த காயமடைந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மத்துார் போலீசார் விசாரணையில், காதலர்களான இவர்கள் அடிக்கடி, டூவீலரில் பல இடங்களுக்கு செல்வது வாடிக்கையாக வைத்திருந்த நிலையில், நேற்று அதிகாலை விபத்தில் சிக்கினர் என தெரியவந்தது.