/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி
/
கருணாநிதி நினைவு நாள் அமைதி பேரணி
ADDED : ஆக 08, 2025 01:12 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின், 7ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில், கிருஷ்ணகிரி பழையவீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகிலிருந்து அமைதி பேரணி துவங்கி, ராயக்கோட்டை மேம்பாலம் அருகிலுள்ள கருணாநிதி சிலை அருகே நிறைவடைந்தது. கருணாநிதி சிலைக்கு, மதியழகன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன், நகர்மன்ற தலைவர் பரிதா நவாப், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜ், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் அன்பரசன், நகர செயலாளர்கள் அஸ்லாம், வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர். பின்னர், கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, அண்ணாதுரை சிலை மற்றும் ரவுண்டானாவில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், ஓசூர் ராம்நகரில் இருந்து, தாலுகா அலுவலக சாலை அண்ணாதுரை சிலை வரை, மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ்
எம்.எல்.ஏ., தலைமையில், கட்சியினர் பேரணியாக வந்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், ஓசூர் மாநகர செயலாளர் சத்யா, கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மாதேஸ்வரன், பகுதி செயலாளர் ஆனந்தய்யா, மாவட்ட பொருளாளர் சுகுமார், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.