/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கட்டப்பஞ்சாயத்து; தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
/
கட்டப்பஞ்சாயத்து; தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
கட்டப்பஞ்சாயத்து; தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
கட்டப்பஞ்சாயத்து; தீக்குளித்த மாற்றுத்திறனாளி உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம்
ADDED : ஜன 18, 2025 02:31 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கட்டப்பஞ்சாயத்து பிரச்னையில் தீக்கு-ளித்த மாற்றுத்திறனாளி உயரிழந்தார். அவரை தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்யாமல், உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி, இறந்தவரின் குடும்பத்தினர் வாயில் கருப்புத்துணி கட்-டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்-டுள்ளனர்.
கிருஷ்ணகிரி அடுத்த மல்லிநாயனப்பள்ளி பஞ்.,க்குட்பட்ட எலுமிச்சங்கிரியை சேர்ந்தவர் வெங்கடேசன், 53, மாற்றுத்திற-னாளி. இவரது மனைவி ஜமுனா,48. ஒரு மகள், ஒரு மகன் உள்-ளனர். எலுமிச்சங்கிரியில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதில் வெங்கடேசனுக்கும், நிர்வாகத்-தினருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேசனையும் அவரது குடும்பத்தையும் ஊரை விட்டு தள்ளி வைப்பதாக ஊர் பெரியவர்கள் கூறியுள்-ளனர். மனமுடைந்த வெங்கடேசன் கடந்த, 15ல், எலுமிச்சங்கிரி அரசு துவக்கப்பள்ளி முன் தன் உடலில் டீசலை ஊற்றி தீக்கு-ளித்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் வெங்க-டேசன் இறந்தார்.
ஆனால் வெங்கடேசனின் உடலை அவர்களது உறவினர்கள் வாங்கவில்லை. இந்நிலையில் நேற்று மாலை எலுமிச்சங்கிரியில் வெங்கடேசனின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக் கோரியும், நீதி வேண்டியும் அவரது உறவினர்கள், வாயில் கருப்பு துணியை கட்டியும், கையில் மெழுகுவர்த்தி ஏந்-தியும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் கிருஷ்ண-கிரி டி.எஸ்.பி., முரளி, மகராஜகடை இன்ஸ்பெக்டர் தேவி பேச்சு-வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
எங்கள் ஊரில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி, ஊரை விட்டு ஒதுக்-கியதாக, ஊர் கவுண்டர்கள் ராமன், கிருஷ்ணமூர்த்தி, ஊர் பிர-முகர் கிருஷ்ணன், தேவேந்திரன், மற்றும் சின்ன கோவிந்தன் உட்-பட எட்டு பேர் மீது வெங்கடேசன், கலெக்டர் முதல் வி.ஏ.ஓ., வரை புகாரளித்தார்; யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது தவிர தன்னை திட்டி அவமானப்படுத்தியதாக மேலும், 6 பேர் மீதுள்ள கோபத்திலும், மனஉளைச்சலிலும் தற்கொலைக்கு முயன்றதாக தீக்காயங்களுடன் வெங்கடேசன் வாக்குமூலமும் அளித்துள்ளார்.
ஆனால் அவர்களில் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. நேற்று வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊரில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எலுமிச்சங்கிரி கிரா-மத்தில் வெங்கடேசனின் உறவினர்கள், 65 குடும்பத்தினர் உள்ளோம். நாங்கள் சாலை மறியலிலோ, ஆர்ப்பாட்டத்திலோ ஈடுபடவில்லை. வெங்கடேசன் மரண வாக்குமூலத்தின்படி அவ-ரது தற்கொலைக்கு காரணமாகி வழக்கு பதியப்பட்டுள்ள, 14 பேரில், 5 பேரையாவது போலீசார் கைது செய்தால் சடலத்தை வாங்குவோம். இல்லையெனில் அவர்களை கைது செய்யும்வரை சடலத்தை வாங்காமல் போராடுவோம்.
இவ்வாறு கூறினர்.