/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பி.பள்ளிப்பட்டியில் கெபித் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
/
பி.பள்ளிப்பட்டியில் கெபித் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பி.பள்ளிப்பட்டியில் கெபித் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பி.பள்ளிப்பட்டியில் கெபித் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
ADDED : ஏப் 06, 2024 04:04 AM
பாப்பிரெட்டிப்பட்டி: தர்மபுரி மாவட்டம், பாப்பி ரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில் புனித லுார்து அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இங்கு கெபித் திருவிழா, நேற்று முன்தினம் மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இத்திருவிழாவில், மதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பர்.
அன்னையின் உருவம் பொறித்த கொடியை ஆலய பங்கு மக்கள், ஆசிரியர் பாரதி உள்ளிட்டோர் ஊர்வலமாக ஆலயத்துக்கு எடுத்து வந்தனர். தர்மபுரி முதன்மை மறை மாவட்ட குரு அருள்ராஜ் மற்றும் ஆலய பங்குத்தந்தை உள்ளிட்டோர் சிறப்பு ஜெபம் செய்து கொடியை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து தினசரி திருப்பலி நடந்து வருகிறது.