/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளியில் கே.ஜி., வகுப்புகள் துவக்கம்
/
அரசு பள்ளியில் கே.ஜி., வகுப்புகள் துவக்கம்
ADDED : ஜூன் 03, 2025 01:31 AM
ஊத்தங்கரை,கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு துவக்கப் பள்ளியில், எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் துவக்க விழா, இலவச பாட புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார். பி.டி.ஏ., துணைத் தலைவர் ஜெயராமன் வரவேற்றார். டி.எம்.சி., தலைவர் சுகந்தி, துணைத்தலைவர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் யு.கே.ஜி., எல்.கே.ஜி., வகுப்பறையை ரிப்பன் வெட்டி
துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், வட்டார கல்வி அலுவலர்கள் சாந்தி, சீனிவாசன், பழனிசாமி, ஆசிரியர் பயிற்றுனர் சண்முகம், அ.தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் சாகுல்அமீது, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பியாரே ஜான், நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம், அங்கன்வாடி அமைப்பாளர் தௌலத், ஆசிரியர்கள் பானுமதி, உமா, சகிலா, சரண்யா, பாரதி மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.