/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; ரவுடியின் கூட்டாளிகள் இருவர் கைது
/
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; ரவுடியின் கூட்டாளிகள் இருவர் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; ரவுடியின் கூட்டாளிகள் இருவர் கைது
ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல்; ரவுடியின் கூட்டாளிகள் இருவர் கைது
ADDED : ஜூலை 02, 2024 07:22 AM
ஓசூர் : ஓசூரில், ரியல் எஸ்டேட் அதிபரை கடத்திய வழக்கில், ரவுடியை தேடி வரும் போலீசார், அவ-ரது கூட்டாளிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மத்திகிரி சந்திப்பு சாலை பகுதியை சேர்ந்த ஜனார்த்தனரெட்டி என்-பவரின் மனைவி ஸ்வர்ணா, 44; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தளி அருகே குருபரப்பள்ளியை சேர்ந்த பிரபல ரவுடி எதுபூஷனரெட்டி, 37; இவரது மைத்துனரான பெங்களூரு சந்திரகுமார் என்பவர், கடந்த, 3 மாதங்களுக்கு முன், தளியில் தனக்கு சொந்தமான, 6.4 ஏக்கர் நிலத்தை, ஸ்வர்ணா மூலமாக அப்பகுதியை சேர்ந்த, சஞ்சய், பாலித்சிங் ஆகியோருக்கு விற்-றுள்ளார். இந்த பத்திரப்பதிவை ரத்து செய்து, நிலத்தை சந்திரகுமாரிடம் திருப்பி தருமாறு எது-பூஷனரெட்டி கூறியதற்கு, ஸ்வர்ணா மறுத்-துள்ளார்.
இதனால் கடந்த மாதம், 13 மதியம், 2:00 மணிக்கு, ஓசூர் பழைய பி.எஸ்.என்.எல்., அலுவலகம் எதிரே நின்றிருந்த ஸ்வர்ணாவை, ரவுடி எதுபூஷன-ரெட்டி மற்றும் அவரது கூட்டணிகளான தாசிரிப்-பள்ளி நல்லதம்பி, 46, கர்நாடகா மாநிலம், ஆனைக்கல்லை சேர்ந்த உமேஷ், 45, ஆகியோர் காரில் கடத்தி மிரட்டினர். பின் ஸ்வர்ணாவை மத்திகிரியில் இறங்கி விட்டு தப்பினர்.இது தொடர்பாக நேற்று முன்தினம் ஸ்வர்ணா புகார் படி, ஓசூர் டவுன் போலீசார் நல்லதம்பி, உமேஷ் ஆகியோரை கைது செய்து, தலைமறை-வான எதுபூஷனரெட்டியை தேடி வருகின்றனர். இவர் மீது தளி ஸ்டேஷனில், 3 கொலை வழக்கு மற்றும் கொலை மிரட்டல் வழக்கு உட்பட, 7 வழக்-குகள் உள்ளன.