ADDED : ஜூன் 12, 2026 04:41 AM
கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், 1.67 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார். வெங்கடாபுரம் பஞ்.,ல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைக்கு சொந்தமான வணிக வளா-கத்தில் குழந்தைகள் நலக்குழுமம் மற்றும் இளஞ்சிறார் நீதிக் குழு ஆகியவற்றின் தற்போ-தைய செயல்
பாடுகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தற்-பொழுது நடந்து வரும், பல்வேறு மேம்பாட்டு பணிகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, கிருஷ்ண-கிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி கீழ்புதுாரில் மகளிர் சுய
உதவிக்குழு கட்டடத்தில், 7.30 லட்சம் ரூபாய் தடுப்பு சுவர் அமைக்கும் பணி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு, 72.40 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டட பணிகள், சாலைகள் சீரமைப்பு பணி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கும் படி அறிவுறுத்-தினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்-குனர் கவிதா, மாவட்ட சி.இ.ஓ., மதன்குமார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சக்தி காவியா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
