தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வுக்கான பயிற்சி துவக்கம்

டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வுக்கான பயிற்சி துவக்கம்

டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' தேர்வுக்கான பயிற்சி துவக்கம்


ADDED : ஜூன் 12, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை-யத்தின், 2026ம் ஆண்டு திட்டத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 1' போட்டி தேர்விற்கான அறிவிப்பு வரும், 23ல், வெளியாகிறது. இத்தேர்-விற்கான இலவச பயிற்சி வகுப்பு, கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேற்று துவங்கியது.

மாவட்ட துணை கலெக்டர் (பயிற்சி) சவுமியா துவக்கி வைத்து, போட்டி தேர்வுக்கு படிக்கும் புத்த-கங்கள், என்னென்ன பாடங்களை தேர்ந்தெடுத்து படிப்பது, எவ்வாறு படிப்பது, போட்டி தேர்வில் கேட்கப்படும் கேள்விகள், அச்சமின்றி போட்டித்-தேர்வை எதிர்கொள்ளுதல் என்பது குறித்து பேசினார்.இந்த அலுவலகத்தில் பள்ளி பாடபுத்தகங்கள் உள்பட, 3,000க்கும் மேற்பட்ட நுால்கள் அடங்கிய இலவச நுாலக வசதி, பயிலக வசதி மற்றும் இல-வச வைபை வசதிகள் போன்ற தேர்வர்கள் பயன்-பெறும் வகையிலான அனைத்து வசதிகளும் உள்ளன. மேலும் விபரங்களுக்கு, இந்த அலுவல-கத்தை நேரிலோ, அல்லது 04343-291983 என்ற அலுவலக எண்ணிலோ, தொடர்பு

கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us